ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 28 July 2023 6:52 AM GMT (Updated: 28 July 2023 7:34 AM GMT)

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.


Next Story