ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீராங்கனை ஜோதி புதிய தேசிய சாதனை


ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீராங்கனை ஜோதி புதிய தேசிய சாதனை
x
தினத்தந்தி 17 Feb 2024 9:00 PM GMT (Updated: 17 Feb 2024 9:00 PM GMT)

பெண்களுக்கான 60 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி 8.12 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

தெஹ்ரான்,

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 60 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி 8.12 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கடந்த ஆண்டு இந்த பந்தயத்தில் அவர் 8.13 வினாடியில் கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அவர் தனது சொந்த சாதனையை தகர்த்திருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த 24 வயதான ஜோதி 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும், ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றவர் ஆவார்.

முன்னதாக, லாக்போரா சர்வதேச தடகள போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஜோதி பந்தய தூரத்தை 13.11 வினாடியில் கடந்து புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.


Next Story