கொரிய ஓபன் பேட்மிண்டன்; இந்திய இணை சாம்பியன்


கொரிய ஓபன் பேட்மிண்டன்; இந்திய இணை சாம்பியன்
x

image courtesy; AFP

தினத்தந்தி 23 July 2023 8:09 AM GMT (Updated: 30 Aug 2023 10:22 AM GMT)

கொரிய ஓபன் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

யோசு ,

கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரட்டையர் பேட்மிண்டன் தரவரிசையில் 3-வது இடத்தில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ள இந்தோனேஷிய இணை உடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இந்நிலையில் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 17-21,21-13 மற்றும் 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.


Next Story