உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற லவ்லினாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு; அசாம் அரசு அறிவிப்பு


உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற லவ்லினாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு; அசாம் அரசு அறிவிப்பு
x

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெயினுக்கு அசாம் அரசு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்து உள்ளது.

கவுகாத்தி,

டெல்லியில் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில், மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், 75 கிலோ எடை பிரிவில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்க பதக்கம் பெற்று தந்து பெருமை தேடி தந்து உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவரான லவ்லினா இறுதி போட்டியின்போது, ஆஸ்திரேலியாவின் கெய்த்லின் பார்க்கரை 5-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர் தவிர, மற்றொரு இந்திய வீராங்கனையான நிக்கத் ஜரீனும் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றார்.

இந்நிலையில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று சட்டசபையில் பரிசு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறும்போது, மாநிலத்தின் விளையாட்டு கொள்கையின் கீழ், லவ்லினாவுக்கு அசாம் அரசு ரூ.50 லட்சம் பரிசு தொகையை அறிவிக்கின்றது.

லவ்லினா போர்கோஹெயின் நம்மை (அசாம்) பெருமையடைய செய்து உள்ளார். சிறந்த முறையில் பங்காற்றியதற்காக அவருக்கு அசாம் சட்டசபை நன்றி தெரிவிக்கின்றது என்று கூறியுள்ளார்.


Next Story