மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிரனாய் அரையிறுதிக்கு தகுதி...!

Image Courtesy : PTI
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறினார்.
கோலாலம்பூர்,
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாய் மற்றும் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் பிரனாய் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை 25-23, 18-21, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
அரையிறுதியில் அவர் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொள்கிறார். முன்னதாக பிவி சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
அவர் அடுத்த அரையிறுதியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொள்கிறார்.
Related Tags :
Next Story






