மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மேற்பார்வை கமிட்டியின் தலைவராக மேரிகோம் நியமனம்


மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மேற்பார்வை கமிட்டியின் தலைவராக மேரிகோம் நியமனம்
x

மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மேற்பார்வை கமிட்டியின் தலைவராக மேரிகோம் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கூறி வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இது குறித்து விசாரிக்க மேற்பார்வை கமிட்டி அமைக்கப்பட்டு 4 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அதுவரை தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கை ஒதுங்கி இருக்கவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தும் மேற்பார்வை கமிட்டியை மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாகூர் நேற்று அறிவித்தார். 5 பேர் கொண்ட இந்த கமிட்டியின் தலைவராக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கமிட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை திருப்தி முர்குண்டே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களை அடையாளம் காணும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராஜகோபாலன், சாய் முன்னாள் இயக்குனர் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Next Story