தடகள வீராங்கனை நௌஷீன் பானுசந்த்தை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவிக்க நௌஷீன் பானுசந்த்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை,
கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை தங்கை நௌஷீன் பானுசந்த், 71வது டென்சிங் ஹிலாரி மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச மாரத்தான் போட்டியில் பங்கேற்று 42 கிலோமீட்டர் தூரத்தை 10 மணிநேரம் 30 நிமிடங்களில் கடந்து வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலம் நிதியுதவி பெற்று இப்போட்டியில் பங்கேற்ற நெளஷீன் பானுசந்த், வெற்றிக்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை கோவையில் இன்று அமைச்சர் உதயநிதியிடம் காண்பித்தார். அவரின் இந்த சாதனையை அமைச்சர் உதயநிதி பாராட்டினார். தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்து, தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தருமாறு அவரை வாழ்த்தினார்.
Related Tags :
Next Story