தேசிய அளவிலான சிலம்பப் போட்டி; 24 தங்கம் வென்று கோவை வீரர்கள் சாதனை


தேசிய அளவிலான சிலம்பப் போட்டி; 24 தங்கம் வென்று கோவை வீரர்கள் சாதனை
x

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் கோவை வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்

கோவை:

பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி கோவாவில் கடந்த 8-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 8,11,14,17,18,19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரட்டைவாள், மான்கொம்பு, ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, ஒற்றை சுருள், இரட்டைச் சுருள், சுருள் வாள், வேல் கம்பு, குத்துவரிசை உள்ளிட்ட பிரிவுகளில் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் கோவை கோவில்பாளையம், கோட்டைபாளையம் பகுதியிலிருந்து 13 மாணவ, மாணவிகள் சிலம்ப ஆசிரியர் தென்னரசு தலைமையில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதில் 24 தங்கப்பதக்கமும், 2 வெள்ளி பதக்கமும் பெற்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மேலும் மொத்தம் 26 பதக்கம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

1 More update

Next Story