ஈட்டி எறிதல் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தார், நீரஜ் சோப்ரா


ஈட்டி எறிதல் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார், நீரஜ் சோப்ரா
x

கோப்புப்படம் 

ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

ஈட்டி எறிதல் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா (1,455 புள்ளி) முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.

ஒலிம்பிக் மட்டுமின்றி, டைமண்ட் லீக் போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா சாதித்ததால் அவருக்கு 'நம்பர் ஒன்' அந்தஸ்து கிட்டியுள்ளது. அவரை விட 22 புள்ளிகள் பின்தங்கியுள்ள உலக சாம்பியனான கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 2-வது இடமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான செக்குடியரசின் சாகுப் வாட்லெஜ் (1,416 புள்ளி) 3-வது இடமும் வகிக்கிறார்கள்.


Next Story