பாவோ நூர்மி போட்டியில் இருந்து ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகல்


பாவோ நூர்மி போட்டியில் இருந்து ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகல்
x

பாவோ நூர்மி போட்டியில் இருந்து ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலக முடிவு எடுத்ததாக அவரது மானேஜர் போட்டி அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்.

பாவோ நூர்மி விளையாட்டு போட்டி பின்லாந்து நாட்டில் உள்ள துர்குவில் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து ஒலிம்பிக் சாம்பியனான இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கடைசி நேரத்தில் விலகி இருக்கிறார். உடல்நல பிரச்சினை காரணமாக நீரஜ் சோப்ரா இந்த போட்டியில் இருந்து விலக முடிவு எடுத்ததாக அவரது மானேஜர் போட்டி அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த தோகா டைமண்ட் லீக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அதன் பிறகு பயிற்சியின் போது தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டதால் கடந்த 4-ந் தேதி நெதர்லாந்தில் நடந்த எப்.பி.கே.சர்வதேச போட்டியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விலகுவதாக அறிவித்து இருந்தார். தற்போது தொடர்ந்து 2-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார். நீரஜ் சோப்ரா முழு உடல் தகுதியை பெற்று எப்போது களம் திரும்புவார் என்பது தெளிவாக தெரியவில்லை.


Next Story