பின்லாந்தில் ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா


பின்லாந்தில் ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா
x

பின்லாந்தில் தொடர் மழைக்கு இடையே ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றுள்ளார்.



ஹெல்சின்கி,



பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடந்தது. இதில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார்.

இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை. 2வது முயற்சியில் சோப்ரா தவறு செய்த நிலையில், 3வது முயற்சியின்போது, அவர் தவறி கீழே விழுந்தது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு, அவர் காயமின்றி எழுந்து சென்றார்.

போட்டியின்போது தொடர் மழை பெய்தது. இதனால், ஈட்டி எறியும் வீரர்கள் அனைவருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது. இந்த போட்டியில் அதிக தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ராவுக்கு தங்க பதக்கம் கிடைத்து உள்ளது.

ஒலிம்பிக் தங்க பதக்கத்திற்கு பின் அவர் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே தங்கம் வென்றுள்ளார். சோப்ரா, அடுத்து நடைபெற உள்ள டயமண்ட் லீக் போட்டிக்கான பயிற்சியை பின்லாந்தில் மேற்கொண்டு வருகிறார்.




Next Story