பாரா ஒலிம்பிக் : வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை ரூபினா


பாரா ஒலிம்பிக் : வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை ரூபினா
x

Image : SAI Media 

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இறுதிப்போட்டிஇன்று நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் 211.1 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் ஈரான் வீராங்கனை சரே ஜவன்மர்டி 236.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கமும், துருக்கி வீராங்கனை அய்சல் 231.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.

1 More update

Next Story