புரோ கபடி லீக்; பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் வெற்றி..!

Image Courtesy: @ProKabaddi
12 அணிகள் கலந்து கொண்டுள்ள புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நொய்டா,
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 38-37 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story






