புரோ கபடி லீக்; தபாங் டெல்லி - புனேரி பால்டன் ஆட்டம் டிரா


புரோ கபடி லீக்; தபாங் டெல்லி - புனேரி பால்டன் ஆட்டம் டிரா
x

Image Courtesy: @ProKabaddi

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 9 மணிக்கு புதுடெல்லியில் தொடங்கிய ஆட்டத்தில் தபாங் டெல்லி - புனேரி பால்டன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்தன. இறுதியில் இந்த ஆட்டம் 30-30 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story