புரோ கபடி லீக்: 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தபாங் டெல்லி திரில் வெற்றி- புள்ளி பட்டியலில் முதலிடம்


புரோ கபடி லீக்: 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தபாங் டெல்லி திரில் வெற்றி- புள்ளி பட்டியலில் முதலிடம்
x

Image Courtesy: Twitter @ProKabaddi

தபாங் டெல்லி 44-42 என்ற கணக்கில் உ.பி யோத்தா அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி அணி யு மும்பா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 41-27 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணி, யு மும்பா அணி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 53-33 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்திஇரண்டாவது வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இன்று தபாங் டெல்லி அணி உ.பி யோத்தா அணியை எதிர்கொண்டது. அனல் பறக்க நடைபெற்ற இந்த போட்டியில் தபாங் டெல்லி 44-42 என்ற கணக்கில் உ.பி யோத்தா அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெல்லி அணி தற்போது 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


Next Story