புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி..!


புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி..!
x

image courtesy: ProKabaddi twitter

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 33-30 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.


Next Story