புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்


புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்
x

image courtesy: Bengal Warriors twitter

இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஜெய்ப்பூர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இதில் அடுத்தகட்ட லீக் சுற்று ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் சந்திக்கின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story