புரோ கபடி லீக்: அரியானா அணியை வீழ்த்தி பாட்னா அபார வெற்றி


புரோ கபடி லீக்:  அரியானா அணியை வீழ்த்தி  பாட்னா அபார வெற்றி
x
தினத்தந்தி 29 Dec 2023 4:21 PM GMT (Updated: 29 Dec 2023 4:36 PM GMT)

தொடக்கம் முதல் பாட்னா பைரேட்ஸ் சிறப்பாக விளையாடியது.

லக்னோ,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய பாட்னா பைரேட்ஸ் அணி 46 - 33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story