புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது யு மும்பா அணி


புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது யு மும்பா அணி
x

Image Tweeted By @ProKabaddi

இந்த சீசனில் யு மும்பா அணி 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் யு மும்பா அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது.

யு மும்பா அணி சார்பாக குமன் சிங் தனது அட்டகாசமான ரெய்டுகளின் மூலம் 4 போனஸ் புள்ளிகள் உட்பட 12 புள்ளிகளை குவித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் யு மும்பா அணி 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.


Next Story