ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முதல் இந்திய தலைவராகிறார் ரன்தீர் சிங்

Image Courtesy: AFP
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முதல் இந்திய தலைவராக ரன்தீர் சிங் நியமிக்கப்பட உள்ளார்.
புதுடெல்லி,
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான 77 வயதான ரன்தீர் சிங், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (ஓ.சிஏ.) புதிய தலைவராகிறார்.
இந்த பதவிக்கு வரும் செப்டம்பர் 8-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரை தவிர வேறு யாரும் போட்டியில் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக, தற்போது பொறுப்பு தலைவராக செயல்படும் பஞ்சாப்பைச் சேர்ந்த ரன்தீர் சிங், ஓ.சி.ஏ-யின் தலைவர் பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.
Related Tags :
Next Story






