உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது
x

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தல்.

சாங்வான்,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே ஜோடி 17-13 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரியின் எஸ்தர் மெஸ்ஜாரோஸ்-இஸ்வான் பெனி இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் பபுடா தங்கம் வென்று இருந்தார்.

10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியாவின் பலாக்-ஷிவா நர்வால் ஜோடி 16-0 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் ஐரினா லோக்டினோவா-வாலெரி ரகிம்ஹான் இணையை எளிதில் தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது.

ஆண்களுக்கான டிராப் போட்டியின் இறுதி சுற்றில் பிரித்விராஜ் தொண்டைமான், விவான் கபூர், போவ்னீஷ் மென்டிரதா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-6 என்ற புள்ளி கணக்கில் சுலோவக்கியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

1 More update

Next Story