ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி


ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி
x

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.

மாட்ரிட்,

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் வென் யு ஜாங்கை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டம் 30 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு ஆட்டத்தில் அஷ்மிதா சாலிஹா (இந்தியா) 13-21, 11-21 என்ற நேர் செட்டில் ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) பணிந்தார்.


Next Story