முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
x

நெல்லையில் நடக்கும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லையில் நடக்கும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

முதல்-அமைச்சர் கோப்பை

நெல்லையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி மாணவர்கள் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், கல்லூரி மாணவர்கள் 17 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கும் கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், கைப்பந்து, மேஜைப்பந்து, டென்னிஸ், பளுதூக்குதல், கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. அவர்களுக்கு ஓட்டப்பந்தயம், இறகுபந்து, கபடி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு ஊழியர்களுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

விண்ணப்பம்

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in-ல் வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story