டைமண்ட் லீக் இறுதி சுற்றில் இருந்து ஸ்ரீசங்கர் விலகல்

இதனை ஸ்ரீசங்கரின் தந்தை முரளி நேற்று தெரிவித்தார்.
புதுடெல்லி,
டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதி சுற்று போட்டி அமெரிக்காவில் உள்ள யூஜின் நகரில் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் பங்கேற்க தகுதி பெற்று இருந்த இந்திய வீரர் ஸ்ரீசங்கர் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார்.
வருகிற 23-ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகுவதில் கூடுதல் கவனம் செலுத்தும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனை ஸ்ரீசங்கரின் தந்தை முரளி நேற்று தெரிவித்தார். கேரளாவை சேர்ந்த 24 வயதான ஸ்ரீசங்கர் கடந்த ஜூலை மாதம் நடந்த ஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஜூன் மாதம் பாரீசில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் 3-வது இடமும் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






