கோத்தகிரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி இம்மாதம் 30 ஆம் தேதி தொடக்கம்


கோத்தகிரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி இம்மாதம் 30 ஆம் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 24 May 2022 8:30 AM GMT (Updated: 2022-05-24T14:02:45+05:30)

கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டியானது இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்ட கால்பந்தாட்ட கழகம் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பொன்விழாவையொட்டி மாநில அளவிலான கால்பந்து போட்டியை கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பில் 2 அணிகள் உள்பட தேனி, ஈரோடு, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, திருவள்ளூர், திண்டுக்கல், சென்னை, சேலம், கோவை, வேலூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், புதுக்கோட்டை கால்பந்து கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 16 அணிகள் பங்கு பெறுகின்றன.

நாக் அவுட் முறையில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதன் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 7 ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தினர் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story