அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் நடந்து வருகிறது.

கவுன்சில் பிளப்ஸ்சில்,

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் லக்ஷயா சென், தரநிலையில் 80-வது இடத்தில் உள்ள சகநாட்டவரும், சென்னையை சேர்ந்தவருமான சங்கர் முத்துசாமியை சந்தித்தார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்ஷயா சென் 21-10, 21-17 என்ற நேர்செட்டில் சங்கர் முத்துசாமியை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் லக்ஷனா சென், தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கு லி ஷி பெங்கை (சீனா) எதிர்கொள்கிறார். இதுவரை இருவரும் நேருக்கு நேர் சந்தித்த 8 போட்டிகளில் லக்ஷயா சென் 5-ல் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 20-22, 13-21 என்ற நேர்செட்டில் தரநிலையில் 36-வது இடத்தில் இருக்கும் சீனாவின் காவ் பாங்ஜியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.


Next Story