கைப்பந்து லீக்: கொச்சி அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி


கைப்பந்து லீக்:  கொச்சி அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
x

நேற்று நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டூபான்ஸ் - கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதின

சென்னை,

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டூபான்ஸ் - கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்த டெல்லி அணி 9-15, 15-17, 15-10, 15-8, 15-8 என்ற செட் கணக்கில் கொச்சியை சாய்த்து 'திரில்' வெற்றி கண்டது. 6-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 4-வது வெற்றியை ருசித்தது. கொச்சி அணி தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு டார்படோஸ்-கோழிக்கோடு ஹீரோஸ் அணிகள் மோதுகின்றன


Next Story