வியெல்டா சர்வதேச சைக்கிள் பந்தயத் தொடர்: 19-வது சுற்றில் டென்மார்க் வீரர் வெற்றி


வியெல்டா சர்வதேச சைக்கிள் பந்தயத் தொடர்: 19-வது சுற்றில் டென்மார்க் வீரர் வெற்றி
x

மொத்தம் 132 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற 19-வது சுற்று போட்டியில் டென்மார்க் வீரர் பெடர்சன் வெற்றி பெற்றார்.

மேட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் பில்போ பகுதியில், வியெல்டா சர்வதேச சைக்கிள் பந்தய தொடர் நடைபெற்று வருகிறது. இந்த சைக்கிள் பந்தயத் தொடர் மொத்தம் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த பந்தயத்தின் 19-வது சுற்று 132 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்றது. மலைப்பாங்கான பகுதிகளில் வீரர்கள் சீறிப்பாய்ந்த நிலையில், பந்தய தூரத்தை 3 மணி நேரம் 19 நிமிடங்களில் கடந்து டென்மார்க் வீரர் பெடர்சன் வெற்றி பெற்றார்.


Next Story