உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த 3 இந்திய வீரர்கள்...!


உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த 3 இந்திய வீரர்கள்...!
x

உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா உள்பட 3 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

புடபெட்ஸ்,

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்த சாம்பியன்ஷிப் தொடர் வரும் 27ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது.

இதில், ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது.

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 12 வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு 3 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி வீசி இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு நேரடி தகுதி பெற்றார். அதேபோல், சக இந்திய வீரர்களான டிபி முனு மற்றும் கிஷோர் ஜீனா ஆகியோரும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். டிபி முனு 81.31 மீட்டரும், கிஷோர் 80.55 மீட்டரும் வீசி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.

உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 3 இந்தியர்கள் நுழைந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ள 12 பேரில் 3 பேர் இந்தியர்கள் ஆவர். இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story