உலக கோப்பை வில்வித்தை: இந்திய ஜோடி தங்கம் வென்று சாதனை


உலக கோப்பை வில்வித்தை: இந்திய ஜோடி தங்கம் வென்று சாதனை
x

உலக கோப்பை வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

பாரீஸ்,

உலக கோப்பை வில்வித்தை போட்டி (3-ம் நிலை) பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி துல்லியமாக அம்புகளை எய்து புள்ளிகளை சேகரித்தனர்.

இந்த ஜோடி 152-149 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் ஜீன் பிலிப் போல்ச்- சோபி டாட்மோன்ட் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. உலக கோப்பை வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story