உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் - உயரம் தாண்டுதலில் ஆஸ்திரேலிய வீராங்கனை தங்கம் வென்றார்


உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் - உயரம் தாண்டுதலில் ஆஸ்திரேலிய வீராங்கனை தங்கம் வென்றார்
x

ஆஸ்திரேலிய வீராங்கனை நிக்கோலா 1.99 மீட்டர் உயரத்தை தாண்டி முதலிடம் பிடித்தார்.

கிளாஸ்கோவ்,

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவ் நகரில் உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த 650-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை நிக்கோலா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அவர் 1.99 மீட்டர் உயரத்தை தாண்டி முதலிடம் பிடித்தார். தொடர்ந்து உக்ரைன் வீராங்கனை யாரோஸ்லேவா 1.97 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடத்தையும், ஸ்லோவேனியா வீராங்கனை லியா 1.95 மீட்டர் உயரம் தாண்டி 3-வது இடத்தையும் பிடித்தனர்.



Next Story