உலக டேபிள் டென்னிஸ் போட்டி: மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு தகுதி


உலக டேபிள் டென்னிஸ் போட்டி: மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு தகுதி
x

கோப்புப்படம் 

இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, 171-ம் நிலை வீராங்கனை வோங் ஜின் ரூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.

டர்பன்,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, 171-ம் நிலை வீராங்கனை வோங் ஜின் ரூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா 11-9, 14-12, 11-4, 11-8 என்ற செட் கணக்கில் வோங் ஜின் ரூவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ஜி.சத்யன் 6-11, 6-11, 5-11, 7-11 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் டாங் கியூவிடம் (ஜெர்மனி) தோற்று வெளியேறினார்.


Next Story