உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - நாக்-ஆவுட் சுற்றுக்கு இந்திய அணி தகுதி


உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - நாக்-ஆவுட் சுற்றுக்கு இந்திய அணி தகுதி
x

குரூப் சுற்றில் 7 புள்ளிகள் பெற்ற இந்தியா, கால் இறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பெய்ஜிங்,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சத்யன் ஞானசேகரன் தலைமையில் மானவ் தாக்கர், ஹர்மித் தேசாய் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வீழ்ந்தது. எனினும் குரூப் சுற்றில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்ற இந்தியா, கால் இறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்று மதியம் நடைபெறும் நாக்-அவுட் சுற்றில், சீன அணியுடன் இந்தியா மோத உள்ளது. இதே போல் இந்திய மகளிர் அணி சீன மகளிர் அணியை இன்று நாக்-அவுட் சுற்றில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story