டென்னிஸ்

காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... வீடியோ வெளியிட்ட சீன பத்திரிக்கை! + "||" + Peng Shuai appears at China tennis event, WTA still concerned

காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... வீடியோ வெளியிட்ட சீன பத்திரிக்கை!

காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... வீடியோ வெளியிட்ட சீன பத்திரிக்கை!
பெங்க் சுயாய் வீடியோவில் சிரித்தபடி நிற்கிறார்.பெங்க் கையசைத்து சிரிக்கிறார், பார்வையாளார்களிடம் இருந்து கைதட்டல்களையும் பெறுகிறார்.
பீஜிங்,

காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை பெங்க் சுயாய் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளார். பெங்க் சுயாய் வீடியோவில் அவர் சிரித்தபடி நிற்கிறார். அத்துடன் அவர் குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் போடுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

37 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பெங்க் சுயாய் சில நபர்களுக்கு மத்தியில் வரிசையில் ஒருவராக நிற்கிறார்.பெங்க் சுயாய் இருக்கும் விளையாட்டு அரங்கத்தில், ஒருவர் “இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன், பெண்கள் இரட்டையர் பிரிவின் முன்னாள் உலக நம்பர்.1 வீராங்கனை - பெங்க் சுயாய்” என்று கூறுகிறார். உடனே, பெங்க் கையசைத்து சிரிக்கிறார், பார்வையாளார்களிடம் இருந்து கைதட்டல்களையும் பெறுகிறார்.

அதேபோல, குளோபல் டைம்ஸ் முதன்மை ரிப்போர்ட்டர், 31 வினாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெங்க் ஒரு பெரிய டென்னிஸ் பந்தில்  குழந்தைகளுக்காக ஆட்டோகிராப் போட்டு கொடுக்கிறார். அத்துடன் குழந்தைகளுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார்.காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை பெங்க் சுயாய் நலமுடன் இருப்பதை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக இந்த இரு வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான பீபிள்ஸ் டெய்லி  இந்த வீடியோக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அஜித்துடன் மோகன்லால்... வைரலாகும் வீடியோ
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
2. சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது
பிக்பாஸ் பிரபலம் ஒருவர், பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
3. சமோசா மாதிரி இருக்கிறார்... ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்.
4. மைக் டைசனை அடிக்க தயாராகும் விஜய் தேவரகொண்டா - வைரலாகும் வீடியோ
அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் லிகர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
5. விஜய்யின் ஜாலி வாக்... வைரலாகும் வீடியோ
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றிருக்கும் நடிகர் விஜய், அங்குள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.