பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: கனடா அணி சாம்பியன்!


பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: கனடா அணி சாம்பியன்!
x

image courtesy; instagram/leylahannietennis

பில்லி ஜீன் கிங் கோப்பையை வென்ற 13 வது நாடு கனடா ஆகும்.

செவில்லே,

60-வது பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இந்த தொடர் கடந்த 7ல் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு கனடா மற்றும் இத்தாலி அணிகள் முன்னேறின.

இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனைகள் லெய்லா பெர்னாண்டஸ் மற்றும் மரினா ஸ்டாகுசிக் ஆகியோர் தங்கள் ஒற்றையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இதன் மூலம் கனடா 2-0 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி பில்லி ஜீன் கிங் கோப்பையை வென்றது.

ஸ்டாகுசிக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்டினா ட்ரெவிசனை 7-5, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார், பெர்னாண்டஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜாஸ்மின் பவுலினியை 6-2, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியை உறுதிப்படுத்தினார்.

ஹெய்டி எல் தபக் தலைமையிலான கனடா, பில்லி ஜீன் கிங் கோப்பையை வென்ற 13 -வது நாடு ஆகும்.


Next Story