ஜூனியர் உலக டென்னிஸ் தகுதி சுற்று: இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது


ஜூனியர் உலக டென்னிஸ் தகுதி சுற்று: இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது
x
தினத்தந்தி 19 Feb 2024 9:00 PM GMT (Updated: 19 Feb 2024 9:00 PM GMT)

இந்திய அணி மலேசியாவில் அடுத்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கும் இறுதி தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

சென்னை,

ஐ.டி.எப். உலக ஜூனியர் டென்னிஸ் (14 வயதுக்கு உட்பட்டோர்) தகுதி சுற்று போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்தது. 21 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது. பசல் அலி மீர் (தமிழ்நாடு), ரித்திக் (தெலுங்கானா), தாவிஷ் (அரியானா) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

இதன் மூலம் இந்திய அணி மலேசியாவில் அடுத்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கும் இறுதி தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணியில் இடம் பெற்ற பசல் அலி மீர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.


Next Story