டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரோகன் போபண்ணா விலகல்


டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரோகன் போபண்ணா விலகல்
x

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரோகன் போபண்ணா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-நார்வே அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் நார்வேயில் உள்ள லில்லிஹேமர் நகரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த சீனியர் இரட்டையர் பிரிவு வீரரான ரோகன் போபண்ணா காயம் காரணமாக விலகி இருக்கிறார். முழங்காலில் ஏற்பட்டு இருக்கும் வீக்கம் குணமடைய ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதால் இந்த கடினமான முடிவை எடுத்து இருப்பதாக ரோகன் போபண்ணா தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக சகெத் மைனெனி அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story