மராட்டிய ஓபன் டென்னிஸ்: தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி-ஜீவன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


மராட்டிய ஓபன் டென்னிஸ்: தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி-ஜீவன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy : @MaharashtraOpen twitter

இரட்டையர் அரைஇறுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன்- ஸ்ரீராம் பாலாஜி இணை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

புனே,

5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 65-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஜி 7-6 (7-5), 6-7 (5-7), 6-1 என்ற செட் கணக்கில் 35-ம் நிலை வீரரான போடிக் வான்டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) வீழ்த்தி, ஏ.டி.பி. சர்வதேச போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 96-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் டாலோன் கிரிக்ஸ்பூர் 7-6 (7-4), 6-1 என்ற நேர்செட்டில் ரஷியாவின் அஸ்லான் கரட்சேவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் கால் பதித்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெஞ்சமின் போன்ஜி-டாலோன் கிரிக்ஸ்பூர் மோதுகிறார்கள்.

இரவில் நடந்த இரட்டையர் அரைஇறுதியில் இந்திய ஜோடியான தமிழகத்தை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன்- ஸ்ரீராம் பாலாஜி இணை 6-4, 7-5 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஜூலியன் கேஷ்- ஹென்றி பேட்டன் கூட்டணியை வீழத்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


Next Story