தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்: தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் 2-வது முறையாக சாம்பியன்

Image Courtesy : @UltTableTennis twitter
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்ரீஜா அகுலா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஸ்ரீநகர்,
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜம்முவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ஹர்மீத் தேசாயை வீழ்த்தி தேசிய சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வென்றுள்ளார். முன்னதாக, கடந்த 2021-ல் அவர் இதில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இதே போல் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சுதிர்தா முகர்ஜியை வீழ்த்தி ஸ்ரீஜா அகுலா சாம்பியன் பட்டத்தை வென்றார். அடுத்தடுத்த தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ஜீத் சந்திரா மற்றும் அங்கூர் பட்டாசார்ஜி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர். மகளிர் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஸ்ரீஜா அகுலா மற்றும் தியா சித்தலே சாம்பியன் பட்டம் வென்றனர். கலப்பு இரட்டையரில் மானவ் தக்கர் மற்றும் அர்ச்சனா காமத் பட்டம் வென்றனர்.






