யுனைடெட் கோப்பை டென்னிஸ்; போலந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி..!


யுனைடெட் கோப்பை டென்னிஸ்; போலந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி..!
x

Image Courtesy: @UnitedCupTennis

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் போலந்து - ஜெர்மனி அணிகள் மோதின.

சிட்னி,

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி இந்த தொடர் தொடங்கியது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் போலந்து - ஜெர்மனி அணிகள் மோதின. அதில் 2-1 என்ற கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதில் முதலில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் போலந்து வெற்றி பெற்றது. இதையடுத்து கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தை ஜெர்மனி கைப்பற்றியது.

இதையடுத்து சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸை 6-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.


Next Story