இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: பெங்களூரு - மோகன் பகான் அணி இடையிலான ஆட்டம் 'டிரா'
பெங்களூரு - மோகன் பகான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இன்றைய ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.
கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்து ஆட்டத்தை 'டிரா' செய்தன.
பெங்களூரு அணி சார்பில் கிலெய்ட்டன் சில்வா (18 வது நிமிடம்), டேனிஷ் பரூக் பட் (26 வது நிமிடம்), பிரின்ஸ் (72 வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் மோகன் பகான் அணி சார்பில் சுபாசிஷ் போஸ் (13 வது நிமிடம்), ஹியூகோ (38 வது நிமிடம்), ராய் கிருஷ்ணா (58 வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இதனையடுத்து இரு அணிகளும் தலா 3 கோல்களுடன் ஆட்டத்தை டிரா செய்தன.
Related Tags :
Next Story