இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டி - டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச முடிவு


இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டி - டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச முடிவு
x
தினத்தந்தி 9 Feb 2022 7:55 AM GMT (Updated: 9 Feb 2022 7:55 AM GMT)

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பூரான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆமதாபாத்,

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடக்கிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பூரான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியில் காயம் காரணமாக பொல்லார்ட் விளையாடவில்லை. இந்திய அணியில் இஷான் கிஷன் நீக்கப்பட்டு கே எல் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.

போட்டிக்கான இரு அணிகளின்  பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் , விராட் கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிரான்டன் கிங், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், நிகோலஸ் பூரன்(கேப்டன்), ஜாசன் ஹோல்டர், ஓடியன் ஸ்மித், அகேல் ஹூசைன், பாபியன் ஆலென், அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச்.

Next Story