ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்


ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்
x
தினத்தந்தி 1 March 2022 4:28 PM IST (Updated: 1 March 2022 4:28 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா நான்கு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

துபாய் ,

பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின்  ஸ்மிரிதி மந்தனா நான்கு இடங்கள் முன்னேறி  8-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கவுர் (20வது ரேங்க்) மூன்று இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து உள்ளார்.

இந்த தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி முதல் இடத்திலும் அடுத்தபடியாக இந்திய அணியின் கேப்டன்  மிதாலி ராஜ் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து  நீடிக்கின்றனர்.

அதே போல் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின்  தீப்தி ஷர்மா 5வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 4வது இடத்தில் நீடிக்கிறார்.

Next Story