இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தல்!!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்தார்.
மொகாலி,
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 85 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது முதலே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி 450 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. அஸ்வின் அரைசதம் கடந்தார்.
ரவீந்திர ஜடேஜா சதம் அடித்தார். அவர் 166 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில்
அவருடைய இரண்டாவது சதம் இதுவாகும்.
இந்திய அணி உணவு இடைவேளை வரை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 468 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ஜெயந்த் யாதவ் 2 ரன்னுடன் ஜடேஜாவுடன் களத்தில் உள்ளார்.
முன்னதாக பண்ட் 96 ரன்களிலும், அஸ்வின் 61 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக லக்மால் மற்றும் எம்புல்டேனியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Tags :
Next Story