மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி
ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை விழ்த்தியது.
வெலிங்டன்,
மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14 ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது. அணியின் கேப்டன் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45.5 ஓவர்களில் 131 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் மெக் லானிங் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராக்கேல் ஹேய்னஸ் 83 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 30.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story