ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்ல அணிக்கு உதவுவதே இலக்கு: இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்ல அணிக்கு உதவுவதே இந்த ஆண்டு எனக்காக நான் நிர்ணயித்த இலக்காகும் என தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய அணியை போட்டியில் வெற்றி பெற செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேற காரணமாக இந்திய வீராங்கனை வந்தனா இருந்தார்.
மேலும் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமையை வந்தனா கட்டாரியா பெற்றார்.
இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி குறித்து வந்தனா கூறியதாவது ;
2024ம் ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடியாகத் இந்திய அணி தகுதிபெற ,சீனாவிவில் இந்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்ல அணிக்கு உதவுவதே இந்த ஆண்டு எனக்காக நான் நிர்ணயித்த இலக்காகும்,
இந்த ஆண்டு உலகக் கோப்பைக்காக நானும் உற்சாகமாக இருக்கிறேன், அதில் போட்டியின் இறுதிப் போட்டிக்கு வருவதே எங்கள் இலக்கு. பயிற்சியில் எனது தொழில்நுட்பத் திறன்களில் நான் மிகவும் கடினமாக உழைக்கப் போகிறேன், ஏனெனில் அதுவே அணிக்கு உதவுவதற்கான சிறந்த வழியாகும்.என தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story