இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 411 ரன்களுக்கு ஆல் அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 411 ரன்களுக்கு ஆல் அவுட்
x
தினத்தந்தி 20 March 2022 4:19 AM IST (Updated: 20 March 2022 4:19 AM IST)
t-max-icont-min-icon

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரூகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது,

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, கேப்டன் ஜோ ரூட்டின் 153 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த லாரன்ஸ்சின் 91 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ்சின் அதிரடி சதம் ஆகியோரின் பங்களிப்பில் 150.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. அந்த அணியிதொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பிராத்வெயிட் மற்றும் ஜெர்மைன் பிளாக்வுட் ஆகியோரின் சதத்தால், நல்ல நிலையை எட்டியது. அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. 

இந்த நிலையில், தொடர்ந்து விளையாடிய அந்த அணி 187.5 ஓவர்களில் 411 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 15 ஓவர்களுக்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.

நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. போட்டி முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், இந்த போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story