இன்றைய ராசிபலன் - 29.09.24


Today Rasi Palan -29.09.24
x

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 13ம்- தேதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 07.09 வரை ஆயில்யம் பின்பு மகம்.

திதி : இன்று மாலை 07.15 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம் : சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை : 03.15 - 4.15

ராகு காலம் மாலை : 04.30 - 6.00

எமகண்டம் மாலை : 12.00 - 1.30

குளிகை மாலை : 03.00 - 4.30

கவுரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45

கவுரி நல்ல நேரம் மாலை : 1.30 - 2.30

சூலம் : மேற்கு

சந்திராஷ்டமம் : பூராடம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் தேவை. நண்பர்களிடையே அளவோடு பழகுவது நல்லது. பெண்களுக்கு வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் வந்து நீங்கும். வழக்குகள் பணப்பிரச்சினை காரணமாக தடைபட்டு இருந்த கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை

ரிஷபம்

மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர், நண்பர்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கடல் நீலம்

மிதுனம்

வேலை இல்லாதவர்கள் தங்கள் வேலையின் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். கழகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பொதுப்பணிக்காக சற்று அலைச்சலுடன் உடல் உழைப்பும் செய்வீர்கள். உயர்பதவி மற்றும் பொறுப்பும் கிடைக்கும். உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கை வந்து சேரும். முக்கிய பணிகளை முடித்துக் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

சிம்மம்

உத்யோகத்தில் அதிக கவனம், நிதானம் தேவை. அலட்சியம், மறதியால் பொருள் இழப்பு உண்டாகலாம். குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பண வரவு தாமதப்படும். வசதி குறைவான வீட்டில் இருந்து பெரிய வசதியான வீட்டுக்கு குடிபோவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கன்னி

இன்று தங்களது பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் வரும். சகோதரிகளிடையே உறவு பலப்படும். வியாபாரம் அமோகமாக இருக்கும். கையில் காசு, பணம் புரளும். பழைய கடன்கள் அடைபடும். மனைவியின் உடல்நலம் காரணமாக அலைச்சல், மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். பணம் பல வழிகளில் வரும். உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : வான் நீலம்

துலாம்

மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவர். பழைய வாகனத்தை தந்துவிட்டு புதியதாக வாங்குவீர்கள். அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

விருச்சிகம்

கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். புகழ் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்கள் நண்பர்களாவர். தடைகளெல்லாம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மகரம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சொத்து, பணம் வரும். உப தொழில்களுக்கு வாய்ப்பு உண்டு. மகன், மகள் திருமணத்தை தடபுடலாக நடத்துவர். வீடு மனை வாங்கும் போது ஆவணங்களை சரிபார்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

கும்பம்

பதவி உயர்வு பற்றிய செய்திகள் மகிழ்ச்சியைத் தரும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனம் தேவை. பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மீனம்

வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. இளைஞர்களுக்கு வெளிநாடு வேலை வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மருத்துவ செலவிற்கு இடமுண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்




1 More update

Next Story