மோட்டார் சைக்கிளில் அஜித்தின் 2-ம் கட்ட உலக சுற்றுப்பயணம்

Update: 2023-03-08 02:13 GMT

அஜித்குமார் சினிமாவை தாண்டி துப்பாக்கி சுடுதல், மோட்டார் பந்தயம், சிறிய வகை ஹெலிகாப்டர் உருவாக்குதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். இதோடு மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்வதிலும் விருப்பம் கொண்டு இருக்கிறார். துணிவு படப்பிடிப்பின்போது வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பைக் பயணம் மேற்கொண்டார்.

தொடர்ந்து உலகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அஜித்குமார் அடுத்து தனது 62-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்க மகிழ்திருமேனி பெயர் அடிபடுகிறது. பட வேலைகளை விரைவில் தொடங்க உள்ளது. எனவே பைக் பயணத்தை படப்பிடிப்புக்கு முன்பே தொடங்குவாரா? அல்லது படப்பிடிப்பை முடித்து விட்டு புறப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் அஜித்குமார் தரப்பில் வெளியிட்ட அறிவிப்பில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு அஜித்குமார் தொடங்க இருக்கும் 2-வது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்துக்கு பரஸ்பர மரியாதை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித்குமார் 62-வது படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் ஒரு வருடம் பைக்கில் உலகம் முழுவதும் சுற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்