கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள 'விருமன்' படத்தின் புதிய அப்டேட்..!

நடிகர் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-19 15:03 GMT

சென்னை,

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விருமன்'. இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ள விருமன் திரைப்படம் குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.

விருமன் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விருமன் படத்தின் ரிலீஸ்தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்